வன்முறையால் எந்த பயனும் கிடைக்காது. குஜராத் பட்டேல் இன மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

வன்முறையால் எந்த பயனும் கிடைக்காது. குஜராத் பட்டேல் இன மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

gujaratகுஜராத் மாநிலத்தில் உள்ள பட்டேல் சமூகத்தை சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்  நடத்தி வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளதால் மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மிகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் தங்களை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, குஜராத்தில் வாழும் பட்டேல் இன மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் கடையடைப்பு, போக்குவரத்து பாதிப்பு என மாநிலம் முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. தலைநகர் காந்திநகர் உள்பட பல இடங்களில் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல், பஸ் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பாதுகாப்பு கருதி மாநில முழுவதும் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டம் குறித்து ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப்பில் ஏராளமான சர்ச்சைக்குரிய கருத்து பரவி வருவதால் அங்கு இண்டர்நெட் சேவை 24 நேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது. மேலும் சூரத் போன்ற ஒருசில பகுதிகளில் 144 தடை உத்தரவும்   போடப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநில மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், வன்முறையால் யாருக்கும் எந்த பயனும் கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply