இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் மோடி. நியூயார்க்கில் சந்திப்பு.

israel modi
அமெரிக்காவுக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்களை நியூயார்க்கில் சந்தித்து சுமார் அரை மணிநேரம் பேசினர். இந்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக இருதரப்பும் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதின் கூறியதாவது:

இந்தச் சந்திப்பின்போது இருநாட்டுத் தலைவர்களும் பரஸ்பரம் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது, பாதுகாப்புத்துறையில் கூட்டு நடவடிக்கைகள், வேளாண்துறை உள்ளிட்டவை குறித்து பேசினர். அப்போது, நீர் மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்கத் இஸ்ரேல் தயாராக இருப்பதாக மோடியிடம் நெதன்யாகு தெரிவித்தார்.

Leave a Reply