பிரதமர் மோடியின் மினிபட்ஜெட் உரை. மக்கள் ஏமாற்றம்

பிரதமர் மோடியின் மினிபட்ஜெட் உரை. மக்கள் ஏமாற்றம்

பாரத பிரதமர் நரேந்திரமோடி, நவம்பர் 8ஆம் தேதிக்கு பின்னர் நேற்று மீண்டும் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். இந்த உரையில் பணப்பற்றாக்குறையை நீக்குதல் குறித்த அறிவிப்புகள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவொரு மினி பட்ஜெட் போல் ஒருசில சலுகைகளை மட்டும் பிரதமர் அறிவித்தது அனைவருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதோ மோடி உரையின் சாரம்சம்

* சிறிய வர்த்தகர்களுக்கான கடன் ரூ. 2 கோடி வரை உயர்த்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

* நாட்டு மக்களுக்கான தனது உரையில், ”சிறிய வர்த்தகர்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ. 2 கோடியாக உயர்த்தப்படும்.

* குளிர்கால அறுவடை விதைப்பு 6 சதவீதமும், உரம் விற்பனை 9 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளது. கூட்டுறவு மற்றும் சொசைட்டி வங்கிகளில் குளிர்கால அறுவடைக்கான கடன் பெற்று இருக்கும் விவசாயிகளின் கடன் மீதான 60 நாள் வட்டியை அரசே செலுத்தும்.

* கர்ப்பிணிப் பெண்களது வங்கிக் கணக்கில் ரூ. 6,000 வரை டெபாசிட் செய்யப்படும்.

* சிறிய வர்த்தகத்திற்கான ரொக்க கடன் வரம்பு 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்படும்.

* பீம் ஏப் மூலம் அதிகமான மக்கள் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

*அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒளிவு மறைவின்றி நடந்து கொள்ள வேண்டும்.

* புத்தாண்டை வரவேற்போம். நாம் அனைவரும் இணைந்து ஒளிமயமான எதிர்காலத்தை கட்டமைப்போம்.

* வங்கியில் மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்யும் பணத்திற்கு 8 சதவீத வட்டி வழங்கப்படும். கறுப்புப் பணத்திற்கு, ஊழலுக்கு எதிரான நமது போராட்டம் ஓயக் கூடாது.

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதற்காக 20,000 ரூபாய் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களானது இனி கூட்டுறவு வங்கிகளின் மூலமாகவே அளிக்கப்படும்.கடன் தொகை மற்றும் மானியங்கள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.மேலும் விவசாயிகளிடம் உள்ள கிசான் கிரடிட் கார்டுகள்,ரூபே கார்டுகளாக மாற்றப்படும்.இதற்காக அடுத்த மூன்று மாதங்களில் 3 கோடி கிசான் கிரடிட் கார்டுகள்,ரூபே கார்டுகளாக மாற்றப்படும்.

விவசாயிகளின் குறிப்பிட்ட சில கடன்களின் 60 நாட்களுக்கான வட்டியை அரசே ஏற்கும்.வங்கிக் கடன் பெற்று விதைக் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 60 சதவீதம் வரிச்சலுகை அளிக்கப்படும்

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply