இன்று கோவா மாநில தலைநகர் பனாஜியில் நடந்த ஒரு விழாவில் INS விக்ரமாதித்யா போர்க் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு முறைப்படி அர்ப்பணித்தார்
புதுடெல்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரசு முறைப் பயணமாக கோவா வந்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவில் வந்திறங்கினார்.
பிரதமர் மோடிக்கு கடற்படை வீரர்கள் சிறப்பான மரியாதை அளித்தனர். அந்த சிறப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர், கப்பலில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலை இந்திய கடற்படைக்கு முறைப்படி அர்ப்பணித்தார்.
தற்போது அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஐ.என்.எஸ் விக்ரமாதியா, ஐ.என்.எஸ். விராட்டுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய விமானம் தாங்கிக் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.என்.எஸ் விக்ரமாதியா என்ற போர்க்கப்பல், 284 மீட்டர் நீளம் கொண்டது. மேலும் இதில் 20 தளங்கள் உள்ளன. 1,600 ஊழியர்களைச் சுமந்தபடி பயணிக்கக் கூடிய இந்த கப்பல் மிதக்கும் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1ncQVgZ” standard=”http://www.youtube.com/v/Ja02qmNItZM?fs=1″ vars=”ytid=Ja02qmNItZM&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep4216″ /]