முலாயம்சிங் யாதவ் பேரன் திருமண நிகழ்ச்சியில் பிரதமர் மோடி.

Lalu-Modi-Mulayam-PTIஉத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம்சிங் அவர்களின் பேரனின் திருமணத்திற்கு முன்னதான திலக் நிகழ்ச்சியில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

முலாயம்சிங் யாதவ்வின் மூத்த பேரன் தேஜ்பிரதாப் என்பவருக்கும் ராஷ்ட்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகள் ராஜலட்சுமிக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்து அந்த திருமணம் வரும் 26ஆம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு முன்னதான திலக் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு இரு தலைவர்களும் அழைப்பு விடுத்திருந்தனர். இவர்களுடைய அழைப்பை ஏற்று பிரதமர் இன்று இந்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக பிரதமரை லாலுவும், முலாயம்சிங்கும் இணைந்து சிறப்பான முறையில் வரவேற்றனர். மேலும் இரு தலைவர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் பிரதமர் மோடி அருகில் அழைத்து அவர்களுடன் சில நிமிடங்கள் அன்பாக பேசினார். அரசியல் விருப்பு, வெறுப்புகளை மறந்து சுமார் ஒரு மணி நேரம் இந்த விழாவில் மோடி கலந்து கொண்டதை அரசியல் வல்லுனர்கள் கூர்ந்து நோக்கி வருகின்றனர்.

மோடியின் வருகையையொட்டி எட்டாவா பகுதியில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள சைபாய் கிராமம் எங்கு பார்த்தாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேசம், பீகார், குஜராத் மாநில பாரம்பரிய உணவுவகைகள் இடம் பெற்றிருந்தது.

இவர்களின் திருமணம் வரும் 26ஆம் தேதி நடக்கிறது. இந்த திருமண விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பங்கு பெற அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply