இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

சமீபத்தில் அமெரிக்கா உள்பட மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்று நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் நாட்டிற்கு செல்கிறார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவை சந்திக்கிறார். இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய உறவுகளை உறுதிப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விவசாயம், தண்ணீர், கண்டுபிடிப்புகள், வளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.

தவிர இரு நாட்டு மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்துவது, விமான போக்குவரத்து, முதலீடு ஆகியவைகளை வலுப் படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

பின் இஸ்ரேல் அதிபர் ரிவ்லினையும் மோடி சந்தித்து பேசுகிறார். ஹைபாவில் இந்திய ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மோடி அஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து தலைநகர் டெல் அவிவ் நகரில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி பேசுகிறார். இந்திய பிரதமர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply