பாரதிய ஜனதாவில் தாவூத் இப்ராஹிமா? மோடிக்கு கடும் கண்டனம்.

11

முஸ்லீம் அமைப்பு தீவிரவாதியுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் எம்.பி ஒருவரை நரேந்திர மோடி கட்சியின் மூத்த தலைவர்களை கலந்து ஆலோசிக்காமல் சேர்த்துக்கொண்டது தொடர்பாக பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிதீஷ் குமாரின் கட்சியில் இருந்த எம்.பி. சபீர் அலி, அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் சமீபத்தில் இணைந்துள்ளார். இவர், இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்புடன்நெருங்கிய தொடர்பு உள்ளவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இவரை கட்சிக்குள் கொண்டுவருவதற்கு நரேந்திர மோடி முயற்சிகளை மேற்கொண்டதாகவும், இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத்திற்கு சபீர் அலியை வரவழைத்து மோடி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

முஸ்லீம்கள் தன் மீது கொண்டிருக்கும் வெறுப்பை போக்குவதற்காக கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக சமீர் அலியை கட்சியில் சேர்ந்ததால், மோடிக்கு வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை தெரிவித்த மூத்த தலைவர்கள், மோடி ஆதரவில் கட்சியில் சேர்ந்த சமீர் அலியை கட்சியில் இருந்து வெளியேற்றினர்.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். தலைவரான ராம் மாதவ் “சபீர் அலி கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது மிகப்பரிய அதிருப்தியை கட்சிக்குள் ஏற்படுத்தி உள்ளது” என கூறியுள்ளார்.

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நக்வி தனது டுவிட்டரில் ” விட்டால் தாவூத் இப்ராகிம் கூட பா.ஜனதாவில் சேர்த்துக்கொள்ளப்படுவார் போல” எனக் கூறியிருந்தார். ஆனாலும் அவருடைய கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் உடனே டுவிட்டரில் தனது கருத்தை டெலிட் செய்துவிட்டார்.

இந்த பிரச்சனையால் பாஜகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply