கடந்த 43 ஆண்டுகளாக பிரிந்து வாழும் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் மீண்டும் மோடி அழைத்தால் அவருடன் சேர்ந்து வாழ தயார் என அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இதுவரை பிரதமர் மோடி எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
கடந்த 1968ம் ஆண்டு மோடி, யசோதா பென் ஆகிய இருவரும் டீன் ஏஜில் இருந்த போது திருமணம் நடந்தது. ஒருசில ஆண்டுகள் மட்டுமே மனைவியுடன் வாழ்ந்த மோடி பின்னர் அவரை பிரிந்துவிட்டார். அதன்பின்னர் தனது தந்தை வீட்டுக்குச் சென்று ஆசிரியர் பயிற்சி முடித்து குஜராத் மாநிலம், வட்காம் மாவட்டத்தில் உள்ள ரஜோசனா கிராமத்தில் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்ற யசோதா தொடர்ந்து 43 ஆண்டுகளாக கணவர் மோடியை பிரிந்தே வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் மும்பையில் வசிக்கும் தன் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக வந்திருந்த அவர், நேற்று அங்கிருந்து குஜராத் புறப்பட்டு சென்றார். அதற்கு முன்பு அவர் அளித்த பேட்டி: கணவருடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதுமேஇருக்கிறது. என்று கூறினார். இருப்பினும் அதற்கான அழைப்பு அவரிடம் இருந்து வரவேண்டும் அவரே அழைத்தால் மட்டும் தான் செல்வேன் என கூறினார்.