பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசு பதவியேற்றவுடன் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டி, இந்தியாவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பட்ஜெட்டில் அறிவித்தபடி நாளை 100 ஸ்மார்ட் நகரங்களை அமைக்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதில் 12 ஸ்மார்ட் நகரங்கள் தமிழகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேச மாநிலத்தில் 13 ஸ்மார்ட் நகரங்களும், தமிழகத்தில் 12 ஸ்மார்ட் நகரங்களும், மகாராஷ்டிராவில் 10 ஸ்மார்ட் நகரங்களும், கர்நாடகாவில் 6 ஸ்மார்ட் நகரங்களும், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 4 ஸ்மார்ட் நகரங்களும், , பிஹார், ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 3 ஸ்மார்ட் நகரங்களும், , ஒடிஸா, ஹரியாணா, தெலங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் 2 ஸ்மார்ட் நகரங்களும், டெல்லி, ஜம்மு காஷ்மீர், கேரளா, ஜார்க்கண்ட், அசாம், இமாச்சலம், கோவா, அருணாசலம், சண்டீகர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு ஸ்மார்ட் நகரங்களும் அமைக்கப்படவுள்ளது.
ஸ்மார்ட் நகரங்கள் மட்டுமின்றி ரூ.50 ஆயிரம் கோடியில் 500 நகரங்களை அனைத்து வசதிகளுடன் புதுப்பிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வரும் 2022-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 2 கோடி புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட மூன்று திட்டங்களையும் நாளை காலை பிரதமர் தொடங்கி வைக்கின்றார்.