என்னைப் பற்றி கவலைப்படாதே. நாட்டை முன்னேற்று. மோடிக்கு தாய் அறிவுரை
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் சமீபத்தில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக காந்திநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார். இந்நிலையில் தன்னை பார்க்க வந்த மகன் நரேந்திரமோடியிடம் அவர், “என்னைப்பற்றி கவலைப்படாமல் இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
தனது தாயாரின் அறிவுரையை கேட்டு நெகிழ்ந்ததாகவும், தாயின் அறிவுரையை பின்பற்றி நடக்கவிருப்பதாகவும் மோடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
நரேந்திர மோடியின் தாயார் ஹிரபா அவர்களுக்கு தற்போது 100 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சாதாரண உடல்நலக்குறைவுதான் என்றும் இருப்பினும் அவருக்கு ரத்த பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே ஆகிய வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மோடியின் தாயார் அவருடைய மூத்த சகோதரர் பங்கஜ் மோடியுடன் ஆமதாபாத்தில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.