ரூ.4.31 கோடிக்கு ஏலம் போன மோடி கோட். குஜராத் வைர வியாபாரி ஏலம் எடுத்தார்.

modi coatகடந்த குடியரசு தினத்தின்போது மோடி அணிந்திருந்த சர்ச்சைக்குரிய கோட் ரூ.4.31 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இந்த தொகை முழுவதும் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி இந்திய குடியரசு தினவிழாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். இந்த விழாவின் போது பாரத பிரதமர் நரேந்திர மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க ஜரிகைகள் கொண்ட கோட் அணிந்திருந்ததாக சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எளிமையாக இருப்பவர் என்ற பெயர் பெற்ற மோடிக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் கோட் தேவயா? என எதிர்க்கட்சிகள் புகார் கூறி வந்த நிலையில், இந்த கோட்டை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என மோடியின் தரப்பில் அதிரடி அறிவிப்பு வெளியானது.

கடந்த மூன்று நாட்களாக நடந்த இந்த கோட் ஏலத்தில் கடைசி நாளான நேற்று இந்த கோட் ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனது. குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் பட்டேல் ரூ.4.31 கோடிக்கு ஏலம் கேட்டார். அதைத் தொடர்ந்த மோடியின் உடை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply