இந்தி மொழியை திணிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. கருணாநிதி புகாருக்கு மத்திய அரசு பதில்

5நாடு முழுவதும் இந்தி மொழியை திணிப்பதாக மத்திய அரசு மீது திமுக தலைவர் கருணாநிதி அளித்துள்ள புகாரை இன்று மத்திய அரசு மறுத்துள்ளது. இந்தி மொழிக்கு முன்னுரிமை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும், எந்த மொழியையும் மக்களிடம் திணிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரென் ரிஜிஜூ, செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்திமொழி திணிப்பை விடுத்து பொருளாதார வளர்ச்சியையும், சமூக மேம்பாட்டையும் முன்னெடுத்துச் செல்வதிலேயே கருத்தூன்றிச் செயல்படவேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி நேற்று கடிதம் எழுதியிருந்தார். இந்தி மொழியை திணித்தால் அதை எதிர்த்து திமுக போராட்டம் நடத்த தயங்காது என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் கிரென் ரிஜிஜூ, “மற்ற மொழிகளை மட்டம் தட்டிவிட்டு இந்தி மொழியை மத்திய அரசு ஊக்குவிக்கவில்லை என்றும், அதே சமயம் இந்தி ஆட்சி மொழி என்றும், எனவே அது ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக மற்ற மொழிகளை காவு கொடுத்து மத்திய அரசு அதனை செய்யாது என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply