ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு ஆதரவா? எதிர்ப்பா? மோடி எடுக்கும் சர்வே
கடந்த 8ஆம் தேதி கருப்புப்பணத்திற்கு எதிரான நடவடிக்கையாக ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் நாள் ஆக ஆக எதிர்ப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. பிரதமர் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் மோடி பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளார். அவருடைய அதிகாரபூர்வமான செயலியில் பத்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பொதுமக்கள் தரும் பதிலை பொருத்து அவருடைய அடுத்த நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி கேட்டுள்ள 10 கேள்விகள் இதுதான்:
1. இந்தியாவில் கருப்புப் பணம் உள்ளது என நினைக்கிறீர்களா?
2.ஊழல் பேயும், கருப்புப் பணமும் ஒழிக்கப்பட வேண்டியன என எண்ணுகிறீர்களா?
3.ஒட்டுமொத்தமாக கருப்புப் பண ஒழிப்பில் அரசின் அணுகுமுறை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மேற்கண்ட மூன்று கேள்விகளுக்கும் ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்க வேண்டும்
4.ஊழலை ஒழிக்க மோடி அரசின் முயற்சிகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 1 முதல் 5 என்ற அளவீட்டில்- மிகவும் பாராட்டத்தக்கது, மிக நன்று, நன்று, பரவாயில்லை, தேவையில்லாதது என மதிப்பளிக்கவும்.
5. 500ரூ மற்றும் 1000ரூ பழைய நோட்டுகளை ஒழிக்க மோடி அரசு எடுத்த முடிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அ.)சரியான திசையில் செல்லும் மிகச்சரியான முடிவு. ஆ.)நல்ல முடிவு இ.)எந்த பயனும் இருக்காது
6.நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது கருப்புப் பணம், ஊழல், பயங்கரவாதம் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவும் என நினைக்கிறீர்களா? அ) உடனடியாக உதவும் ஆ.)சில காலம் சென்றோ, நாட்பட்டோ உதவும் இ.)குறைந்தபட்ச உதவிதான் இருக்கும். ஈ) தெரியவில்லை.
7.நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் ரியல் எஸ்டேட், உயர்கல்வி, மருத்துவம் ஆகியன சராசரி மனிதனுக்கு எட்டும் வகையில் விலை குறையும். அ)கண்டிப்பாக ஆ)ஓரளவுக்கு இ)சொல்ல முடியாது
8.ஊழல், கருப்புப்பணம், பயங்கரவாத மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான இந்த நடவடிக்கையால் நீங்கள் அனுபவித்த அசிரத்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்களா? அ) நிச்சயம் இல்லை. ஆ)ஓரளவுக்கு. ஆனால் அது என் கடமை. இ.ஆம்
9.ஊழலுக்கு எதிராக போராடியவர்கள் இப்போது கருப்புப் பணம், ஊழல், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக போராடுகிறார்கள் என நம்புகிறீர்களா? அ)ஆம் ஆ)இல்லை
10. இது குறித்து ஏதேனும் ஆலோசனைகளை, எண்ணங்களை பிரதமர் மோடியுடன் பகிர நினைக்கிறீர்களா?