புளூவேல் போல் மேலும் ஒரு தற்கொலை கேம்! பொதுமக்கள் அதிர்ச்சி

புளூவேல் போல் மேலும் ஒரு தற்கொலை கேம்! பொதுமக்கள் அதிர்ச்சி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் புளூவேல் என்னும் கேமால் பலர் உயிரை இழந்த நிலையில் தற்போது அதேபோல் ஒரு தற்கொலை கேம் வைரலாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அந்நாட்டு போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, வாட்ஸ் ஆப்பில் வந்த குறுந்தகவல் மூலம் அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அவர் மோமோ சேலஞ்ச் என்ற கேம் விளையாடியதால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

மோமோ கேம் என்பது முன்பின் தெரியாத நபருடன் பழக வேண்டும். இந்த கேமில் நுழைந்த பின்னர் நீங்கள் ஈடுபட மறுப்பு தெரிவித்தால் அதற்கு பதிலாக உங்களை மிரட்டும் விதத்தில் வன்முறையை சித்தரிக்கும் படங்கள் வரும் என்றும். மேலும், உங்களின் தனிப்பட்ட தகவல்களும் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் பயமுறுத்தப்படுகிறதாம். இந்த மிரட்டல் பயம் காரணமாக அர்ஜெண்டினா சிறுமி தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த கேம் தற்போது அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா மற்றும் நேபாளம் என உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்த கேம் மூலம், மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, அதன் மூலம் கொள்ளையில் ஈடுபடுவது தான் நோக்கமாக இருக்கும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply