ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட 4.38 மீ நீளமுள்ள முதலை. அபூர்வ புகைப்படங்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள நயாவியூ என்ற நகரில் உள்ள டேலி ஆற்றின் கரையோரம் திடீர் திடீரென மிருகங்கள் காணாமல் போனதாக வந்தபுகாரை அடுத்து வன விலங்கு அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அந்த பகுதியைதீவிரமாக சோதனை செய்தனர். அப்போது அந்த ஆற்றில் உள்ள ஒரு மிகப்பெரிய முதலைதான் விலங்குகள் காணாமல் போனதற்கான காரணம் என்பதை கண்டுபிடித்து அந்த முதலையை பெரும் சிரமத்திற்கு பின்னர் பிடித்தனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள டேலி ஆற்றங்கரையோரம் செல்லும் நாய்கள், உள்பட விலங்குகளையும் ஒருசில நேரங்களில் மனிதர்களையும் பயமுறுத்தி வந்த மிகப்பெரிய முதலை பிடிபட்டது. அந்த முதலை சுமார் 4.38 மீட்டர் நீளம் இருந்ததாக கூறப்படுகிறது. மூன்று வனவிலங்கு குழுக்கள் லோக்கல் போலீஸார் உதவியுடன் பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் இந்த முதலையை பிடித்துள்ளனர்.

இந்த முதலையை பிடித்த குழுவினர்களின் தலைவர் நிக்கோல்ஸ் இதுகுறித்து கூறும்போது, ‘முதலை இருக்கும் இடத்தை முதலில் கண்டுபிடித்து அதன் பின்னர் ஆற்றின் ஒரு பக்கம் தண்ணீரை நிறுத்திவிட்டு, இன்னொரு பக்கம் உள்ள தண்ணீர் முழுவதையும் வெளியேற்றிவுட்டு முதலையை பிடித்ததாகவும் தாங்கள் எதிர்பார்த்தைவிட இந்த முதலை மிகவும் கொடூரமாக இருந்ததாகவும் கூறினார். தற்போது இந்த முதலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முதலை காப்பகத்தில் விடப்பட்டுள்ளது.

crocodile 1  crocodile

Leave a Reply