மூன்று மொழிகளில் ரீமேக் ஆகிறது மூன்றாம் பிறை

மூன்று மொழிகளில் ரீமேக் ஆகிறது மூன்றாம் பிறை

கடந்த 1982ஆம் ஆண்டு கமல்-ஸ்ரீதேவி நடிப்பில் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த மறக்க முடியாத திரைப்படம் ‘மூன்றாம் பிறை. இந்த படம் இந்தியில் சத்மா என்ற பெயரில் ரிலீஸாகி அங்கும் சூப்பர் ஹிட் ஆனது. கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருதையும், பாலுமகேந்திராவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் பெற்றத்தந்த இந்த படம் தற்போது மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

‘மூன்றாம் பிறை’ படத்தின் ரீமேக் உரிமையை லாய்ட் பேப்டிஸா (Llyod Baptisa) என்ற பிரபல விளம்பர பட இயக்குநர் பெற்றுள்ளதாகவும், இந்த படத்தை அவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கமல், ஸ்ரீதேவி வேடத்தில் புதுமுகங்கள் நடிக்கவுள்ளதாகவும், தற்காலத்துக்கு ஏற்றவாறு திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply