‘விஜய் 59’ படத்தின் டைட்டில் மூன்று முகம்?
விஜய் நடித்து முடித்துள்ள ‘புலி’ படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 17 என உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், விஜய்யின் அடுத்த படமான ‘விஜய் 59′ படத்தின் டைட்டில் குறித்த ஆலோசனைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், தற்போது அந்த படத்திற்கு மூன்று முகம்’ என்ற டைட்டிலை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
சூப்பர் ஹிட் படமான ‘மூன்று முகம்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் உள்பட மூன்று விதமான வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். அதேபோல் ‘விஜய்’ இந்த படத்திலும் போலீஸ் உள்பட மூன்றுவித கெட்டப்புகளில் நடித்து வருவதால் ‘மூன்று முகம்’ டைட்டில் இந்த படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் இந்த டைட்டில் சத்யா மூவிஸ் நிறுவனத்திடம் இருப்பதால், இந்த டைட்டிலுக்கு அனுமதி பெறுவது குறித்து ரஜினி மூலம் பேச படத்தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தாணு அவர்கள் ரஜினியின் “கபாலி’ படத்தையும் தயாரிப்பதால், ரஜினியிடம் பேசி இந்த டைட்டிலை பெற்றுவிடுவார் என்றே கூறப்படுகிறது. விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், மகேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.