எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசனை முந்தியது மெக்கானிக்கல் என்ஜினியரிங். பி.இ.மாணவர்களுக்கு கவுன்சிலிங்

anna university counsellingசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பி.இ. கல்விக்கான மாணவர் சேர்க்கையில் பலவருடங்களுக்கு பின்னர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 541 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. இங்கு பி.இ. மற்றும் பி.டெக் முதலாம் ஆண்டு படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கான கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து வருகிறது.

கடந்த பல வருடங்களாக எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவில்தான் அதிக மாணவர்கள் விருப்பத்துடன் சேருவார்கள். ஆனால் கடந்த ஒருசில ஆண்டுகளாக எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவை விட, மெக்கானிக்கல் பிரிவை மாணவர்கள் மிகவும் ஆவலுடன் தேர்ந்தெடுக்கின்றனர்.  இருப்பினும், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.இ. படிப்புக்கான மொத்தம் உள்ள 2 லட்சத்து 3 ஆயிரத்து 845 இடங்களில், 56 ஆயிரத்து 855 பேர் அப்படிப்பை தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களில் 28 ஆயிரத்து 312 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகளாக படிக்கப் போகிறார்கள்.

இதுவரை கவுன்சிலிங்கிற்கு மொத்தம் 79,101 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 22,000 மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளவில்லை. இந்த வருடம் குறைந்தது சுமார் ஒரு லட்சம் பொறியியல் இடங்கள் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது நடைபெற்று வரும் கவுன்சிலிங்கில் 12,385 மாணவர்கள் மெக்கானிக்கல் பிரிவையும், 11,653 மாணவர்கள் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவையும் தேர்வு செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வருடம் பி.இ. கல்விக்கான மாணவர் சேர்க்கையில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முதலிடமும், எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.

Leave a Reply