எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 100க்கும் மேற்பட்டோர் நீக்கம்: அதிமுக அதிரடி
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்ற பின்னர் அதிமுக தலைமை சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தினகரன் ஆதரவாளர்கள் சிலர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட அடிப்படை பொறுப்பிலிருந்து, மேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சாமி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாமி மட்டுமின்றி அதிமுகவில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் நிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது
நீக்கப்பட்டவர்களில் எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, பாலசுப்பிரமணியன் ஆகியோர்களும் அடங்குவர். இதுகுறித்த அறிவிப்பை ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.