நைஜீரியாவில் 100 பள்ளி மாணவிகள் திடீர் மாயம்: போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்தினார்களா?

நைஜீரியாவில் 100 பள்ளி மாணவிகள் திடீர் மாயம்: போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்தினார்களா?

நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் சமீபத்தில் இந்த அமைப்பினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 100-க்கு மேற்பட்ட மாணவிகள் மாயமாகி உள்ளனர். பள்ளி மாணவிகளை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நைஜீரியா போலீசார் கூறுகையில், மொத்தமுள்ள 926 மாணவிகளில் 815 மாணவிகள் வீடு திரும்பியுள்ளனர். மீதியுள்ள 111 பேரை காணவில்லை. அவர்களில் 50 மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். ஆனால் இதுவரை ஒரு வழக்குகூட பதிவாகவில்லை என்றனர்.

சிக்புக் நகரில் கடந்த 2014-ம் ஆண்டு கடத்தப்பட்ட 200 மாணவிகளில் 100 பேர் மீட்கப்பட்டனர். மேலும், 100 பேரை தேடும் பணியில் ராணுவம் தீவிரமாக உள்ளது என்றும் போலீசார் கூறினர்.

Leave a Reply