1000ஐ தாண்டிய குரங்கு அம்மை பாதிப்புக்கள்!!

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுவரை 29 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 1000க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என கவலை தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டவர்கள், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் .