சுரங்கப்பாதை மேற்கூரையில் இடித்து பள்ளி பேருந்து விபத்து. 30 பேர் காயம்
[carousel ids=”68874,68875,68876″]
நெதர்லாந்து நாட்டின் பள்ளி பேருந்து ஒன்று குறைவான உயரம் உள்ள சுரங்கப்பாதையை கடக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் 30 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரை சேர்ந்த ஒரு பள்ளியில் இருந்து 59 மாணவர்களுடன் ஒரு பேருந்து சுற்றுலா சென்றது. இந்த சொகுசு பேருந்தின் உயரம் 3.65 மீட்டர் ஆகும். ஆனால் இந்த பேருந்து 2.6 மீட்டரே உயரமுள்ள ஒரு சுரங்கப்பாதையில் செல்ல முயன்றபோது மேற்கூரையில் மோதி, பேருந்தின் மேல்பக்கம் முற்றிலும் சேதம் அடைந்தது.
இந்த விபத்து அதிகாலை 5.30 மணிக்கு நடந்ததால் மாணவர்கள் அனைவரும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர். மேற்கூரையில் மோதிய வேகத்தில் பேருந்தில் பயணம் செய்த பெரும்பாலானவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தில் காயம் அடைந்த அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வரும் போலீஸார், கவனக்குறைவாக பேருந்தை ஓட்டிய டிரைவரை கைது செய்துள்ளனர்.