30 வயதிற்கு மேல் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

 

af81e90d-16ed-4f73-b37d-07f3aada11ff_S_secvpf

தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். தினசரி, நடைப்பயிற்சியாவது மேற்கொள்வது அவசியம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கொலஸ்ட்ரால் பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ளவும். அனைவருமே ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை மற்றும் கிளைக்கோமா எனப்படும் கண் நீர் அழுத்த நோய்ப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆண்கள், 30 வயதுக்கு மேல் கொலஸ்ட்ரால், ரத்தத்தில் சர்க்கரை அளவு போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டும்.

பெண்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது மார்பக சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை மேமோகிராம் செய்துகொள்ள வேண்டும். பெண்கள், ஆண்டுக்கு ஒரு முறையாவது பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சிறுநீர் கசிவு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளைப் புறக்கணிக்காமல் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

நார்ச்சத்து, ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். காலை உணவைத் கட்டிப்பாக தவிர்க்க கூடாது. ஆண்களுக்கு 40 வயதில் வரும் கோபம் இயல்பானது என்பதைப் புரிந்து, டென்ஷனைத் தவிர்த்திடுங்கள். குடும்பத்தோடு நேரம் செலவிடுவது அவசியம். குடும்பத்தோடு இணைந்து, உடற்பயிற்சி, செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

Leave a Reply