இலங்கையின் மத்திய மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ள 300 க்கும் அதிகமானோரின் கதி என்ன என்பது குறித்து அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில், கனமழை காரணமாக ஒருசில இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிலும் பதுளை மாவட்டம், ஹல்தும்முல்லாவில் உள்ள தேயிலை தோட்டப் பகுதிகளில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 200க்கும் அதிகமான வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் அந்த வீடுகளில் சிக்கியுள்ளதாகவும் செய்திகள் அதிர்ச்சியான செய்திகள் வெளியாகியுள்ளன.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1yIBzHj” standard=”http://www.youtube.com/v/he1FVJaEhD4?fs=1″ vars=”ytid=he1FVJaEhD4&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep9068″ /]இந்த நிலச்சரிவு காரணமாக இதுவரை 16 பேர் பலியாகியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் விரைந்துள்ளது.
ஆனால் இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நிலச்சரிவில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் கதி என்ன என்பது குறித்து அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் பெரும்பாலும் தமிழர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இலங்கையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவையடுத்து, அதிபர் ராஜபக்சே மீட்பு பணியை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரியையும் அவர் நியமனம் செய்துள்ளார். இலங்கையின் இணை அமைச்சர் செந்தில் தொண்டைமான் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப்பணியை ஆய்வு செய்து வருகிறார்.