3 ஆண்டுகளில் 3,313 விவசாயிகள் தற்கொலை. அதிர்ச்சி தரும் புள்ளிவிபரம்.

surveyசமீபத்தில் ஆம் ஆத்மி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ராஜஸ்தான் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. விவசாயி தற்கொலை பிரச்சனை பாராளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்து பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 3,313 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சி தரும் புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.

விவசாயிகள் தற்கொலை தொடர்பாக நேற்று வெளியான புள்ளி விபர அறிக்கையின் முழுவடிவம்:

கடந்த 2012-ல் கிட்டத்தட்ட 900 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2013-ல் 1100-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் கடந்த 2014-ல் 1300 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

மாநிலங்கள் வாரியாக பார்க்கும்போது, கடந்த மூன்று ஆண்டுகளிலுமே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகளவில் நிகழ்ந்துள்ளது. கேரளாவில் சொற்ப அளவில் விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

Leave a Reply