33 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு:

உலக நாடுகள் அதிர்ச்சி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 33,04,140 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உலக அளவில் கொரோனாவால் இதுவரை மொத்தமாக 233,829 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,039,055 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2201 பேர் உயிரிழந்துளதாகவும், கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 10,95,019 பேர் பாதிக்கபப்ட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தூள்ளது.

அதேபோல் இங்கிலாந்தில் கொரோனாவால் 674 பேர் 24 மணி நேரத்தில் பலியாகியுள்ளதாகவும், அந்நாட்டில் 171,253 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா பலி காரணமாக 24 மணி நேரத்தில் 390 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், அந்நாட்டில் 85,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 268 பேரும், இத்தாலியில் 285 பேரும், பிரான்சில் 289 பேரும் 24 மணி நேரத்தில் பலியாகியுள்ளனர். ஜெர்மனியில் 156 பேரும், ரஷ்யாவில் 101 பேரும், கனடாவில் 188 பேரும் 24 மணி நேரத்தில் பலியாகியுள்ளனர். ஈரானில் 71 பேரும், துருக்கியில் 93 பேரும் கொரோனாவால் 24 பேர்களும் 24 மணி நேரத்தில் பலியாகியுள்ளனர்.

Leave a Reply