இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.ஜூன் மாதத்தில் இந்தியாவில் கொரோனா 4 வது அலை உருவாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை.
இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா தொற்று 8,582 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 8,084 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர், 24 மணி நேரத்தில் 4,592 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் மொத்தம் 47 ஆயிரத்து 995 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள்.