“தல 56” படத்தில் சூரி உள்பட ஒரு டஜன் காமெடி நடிகர்கள். சிறுத்தை சிவா திட்டம்.

comedyகடந்த 2014ஆம் ஆண்டு அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வெளிவந்த ‘வீரம்’ படத்தில் சந்தானம், தம்பி ராமையா, அப்புக்குட்டி, ரமேஷ்கண்னா, மயில்சாமி ஆகிய காமெடி நடிகர்களின் கூட்டம் ஒன்று நடித்தது போலவே தற்போது அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் ‘தல 56’ படத்திலும் ஒரு பெரிய காமெடி கூட்டம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது.

இதுவரை வந்த தகவலின்படி இந்த படத்தில் சூரி, மயில்சாமி, லொள்ளுசபா சாமிநாதன், நான் கடவுள் ராஜேந்திரன், பாலா சரவணன், மகேந்திரன் மற்றும் ஆதித்யா தொலைக்காட்சியில் வரும் நேபாள பெண் தாப்பா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இன்னும் ஒருசில காமெடி நடிகர், நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சுமார் ஒருடஜன் காமெடி நடிகர்கள் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

காமெடி நடிகர்கள் அனைவரும் தனித்தனியாக காமெடி செய்யாமல் இந்த படத்தில் மொத்தமாக நடிக்கும் காமெடி காட்சிகள் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘வீரம்’ படம் போலவே இந்த படமும் காமெடியுடன் கூடிய ஆக்சன் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தில் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்காக அனிருத் ஏற்கனவே இரண்டு பாடல்களை கம்போஸ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதில் ஒரு பாடல் அஜீத்தின் அறிமுகப்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது.

Leave a Reply