உலகில் அமைதியாக வாழ தகுதியான நாடு எது? அமெரிக்காவுக்கு 114வது இடம்

உலகில் அமைதியாக வாழ தகுதியான நாடு எது? அமெரிக்காவுக்கு 114வது இடம்

உலகில் மக்கள் அமைதியாக, நிம்மதியான வாழ்க்கையை வாழும் வகையிலான நாடுகள் எவை எவை என்ற ஒரு பட்டியலை எடுக்கப்பட்டுள்ளது. தி குளோபல் பீஸ் இண்டெக்ஸ் (The Global Peace Index) என்ற நிறுவனம் எடுத்துள்ள இந்த சர்வேயில் உலகின் வல்லரசு நாடு என்று கூறப்படும் அமெரிக்காவுக்கு 114வது இடமே கிடைத்துள்ளது. வன்முறை அதிகமாக நடைபெறும் நாடு என்ற் கூறப்படும் ஆர்மீனியா, ருவாண்டா ஆகிய நாடுகளை விட அமெரிக்கா பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் அமைதியான நாடு என்ற புகழை பெற்ற ஐஸ்லாந்து இந்த ஆண்டும் அந்த இடத்தை தக்க வைத்துள்ளது. ஐஸ்லாந்து நாட்டை அடுத்து நியூசிலாந்து, போர்ச்சுக்கல், ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த பட்டியலில் கடைசி ஐந்து இடங்களில் சிரியா, ஆப்கானிஸ்தான் , ஈராக், தெற்கு சூடான், மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இந்தியா 137வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply