இஸ்லாமிய அரசால் கடத்தப்பட்ட இரண்டு ஜப்பானியர்களில் ஒருவரான கெஞ்ச்சீ கோட்டோவின் தாயார் தனது மகனை விடுவிக்குமாறு கோரியுள்ளார். கடத்தியவர்கள் பிணைத் தொகைக்கு விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்துள்ளது.
இஸ்லாமிய அரசால் கடத்தப்பட்ட இரண்டு ஜப்பானியர்களில் ஒருவரான கெஞ்சீ கோட்டோவின் தாயார் தனது மகனை விடுவிக்குமாறு கோரியுள்ளார்.
பிடித்துவைக்கப்பட்டிருக்கும் இந்த ஜப்பானிய பணயக்கைதிகளை விடுவிக்க கடத்தியவர்கள் பணம் கோரியிருந்தனர்.
அந்த பணம் வந்து சேர்வதற்கு விதித்திருந்த காலக்கெடு முடிவடைய சில மணி நேரங்களுக்கு முன்னர், இந்த கோரிக்கை வந்துள்ளது. அந்த காலக்கெடு தற்போது முடிந்துவிட்டது.
இஸ்லாமிய அரசுக்கு எதிராக போராடும் நாடுகளுக்கு, ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே அளிப்பதாக தெரிவித்திருந்த 200 மில்லியன் டாலர்கள் தொகையைத்தான் இஸ்லாமிய அரசும் கோரியிருந்தது என்பது குறிப்பிடதக்கது.