வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: யுஜிசி எச்சரிக்கை

download (2)

உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள இந்தியக் கல்வி நிறுவனங்களில் பெறப்படும் பட்டங்கள் செல்லாது என, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.
 இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
 

யுஜிசி-இன் வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றாமல் சில கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை வழங்குவது கவனத்துக்கு வந்துள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்களில் பெறப்படும் பட்டங்கள், பட்ட மேற்படிப்புக்கோ அல்லது வேலைவாய்ப்புக்கோ செல்லத் தகுந்ததாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என யுஜிசி தெரிவித்துள்ளது.

 யுஜிசி வழிகாட்டுதல் கூறுவது என்ன?: இந்தியாவில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் வெளிநாட்டுக் கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னதாக, அந்தந்த நாடுகளின் அங்கீகார கவுன்சில்கள் மூலம் உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

 இந்திய சுயநிதி கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை குறைந்தபட்சம் “பி’ கிரேடு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

 கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளைக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வழங்கியிருக்க வேண்டும்.

 இந்த ஒப்பந்தம் மூலம் கொடுக்கப்படும் படிப்புகள் குறித்த முழு விவரத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கல்லூரி இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட, இணைப்பு பல்கலைக்கழகத்திடமும், யுஜிசி-யிடமும் முன் அனுமதி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிகளை யுஜிசி வகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Leave a Reply