திரைப்படங்களை மொபைல் போனிலும் ரிலீஸ் செய்ய வேண்டும். ராஜமெளலி

திரைப்படங்களை மொபைல் போனிலும் ரிலீஸ் செய்ய வேண்டும். ராஜமெளலி

கோலிவுட்டினர் தற்போது புலம்பும் ஒரே வார்த்தை திருட்டு விசிடி என்பதுதான். நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடியால் எந்த பாதிப்பும் இல்லை என்பது பாகுபலி போன்ற படங்களில் இருந்து தெரியவந்த போதிலும், கோலிவுட்டினர் தொடர்ந்து இந்த பாட்டை பாடி வருகின்றனர் என்பது வேறு விஷயம்

இந்த நிலையில் பைரஸியை வெறும் போலீஸ், அரசங்காத்தை வைத்து ஒழிக்க முடியாது என்றும், நான் எதை எதை செய்ய தவறுகிறோமோ அதை பைரஸியினர் சரியாக செய்து காசு சம்பாதித்து வருவதாக ‘பாகுபலி’ இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தெரிவித்துள்ளார்/

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: உலகம் முழுக்கச் சினிமாவைப் பிடித்திருக்கும் பிரச்சினை ‘பைரஸி’. அதைத் தடுப்பது அவ்வளவு சுலபமல்ல. நானும் பல வருடங்களாக அதை எதிர்த்துப் போராடி வருகிறேன். இந்த நாட்களில் நான் ஒன்றை உணர்ந்துள்ளேன். திரையரங்கில், தொலைக்காட்சியில், இணையத்தில் என நமது படங்களைப் பல வழிகளில் நாம் திரையிட்டு வருகிறோம்.

நாம் திரையரங்க வெளியீட்டுக்கும், தொலைக்காட்சிக்கும் எனத் தனியாக வியாபார முறையைப் பின்பற்றி வருகிறோம். ஆனால் இணையம் என்னும் ஊடகத்தின் சாத்தியத்தை உணர நாம் தவறிவிட்டோம். பைரஸியில் ஈடுபடுபவர்கள் இதில் நம்மை மிஞ்சி விட்டனர். சிலருக்குத் திரையரங்கில், சிலருக்குத் தொலைக்காட்சியில், சிலருக்குத் தங்களது மொபைல் போன்களில் படம் பார்ப்பது பிடிக்கும்.

ரசிகருக்கு ஏற்றவாறு, பிடித்தவாறு படம் பார்க்கும் வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அதைப் பைரஸியில் இருப்பவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் செய்வது சரி எனச் சொல்லவில்லை. அது சட்டவிரோதமானதுதான். ஆனால் அதே நேரத்தில் நாமும் அதற்கென ஒரு வியாபார முறையை இன்னும் கொண்டு வரவில்லை. அது பைரஸியை சமாளிக்கும். போலீஸோ, வழக்குகளோ, நீதிமன்ற உத்தரவோ, தனிநபர் போராட்டமோ அதைச் சமாளிக்காது. அது ஒரு எல்லை வரைதான்.

என்ன நடக்கவேண்டுமென்றால், தொலைபேசியில் படத்தை பார்க்கவிரும்புபவர், தனது தொலைபேசியில் நல்ல தரத்தில், காசு கொடுத்து படத்தை பார்க்கும் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். அப்போது அவர்கள் பைரஸியை தேடிச் செல்வது குறையும்’ இவ்வாறு எஸ்.எஸ்.ராஜமெளலி கூறியுள்ளார்.

Leave a Reply