ஒரே அறையில் இருபாலருக்கும் உடற்தகுதி சோதனையா? அதிர்ச்சி தகவல்

ஒரே அறையில் இருபாலருக்கும் உடற்தகுதி சோதனையா? அதிர்ச்சி தகவல்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காவல்துறையில் கான்ஸ்டபிள் பணிக்கு சமீபத்தில் நடத்தபப்ட்ட உடல்தகுதி தேர்வில் விண்ணப்பதாரர்களின் நெஞ்சில் சாதியை குறித்து வைத்திருந்ததாக புகார் எழுப்பப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிஹிந் என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தேர்வான 500 பேருக்கு உடற்தகுதி பரிசோதனை இன்று நடந்தது. அங்கு, ஒரே அறையில் ஆண்கள் உள்ளாடையுடன் பரிசோதனைக்கு நிற்க, அதே அறையில் பெண் தேர்வர்கள் நின்று கொண்டிருந்தனர்.

மேலும், பெண் தேர்வர்களை பெண் டாக்டர்கள்தான் பரிசோதிக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், ஆண் டாக்டர்களே பெண் தேர்வர்களை பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேட்டியளித்த, தலைமை மருத்துவர், “இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. யார் தவறு இழைத்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

Leave a Reply