துப்புரவு பணியில் சேர்ந்த எம்.எஸ்.சி படித்த மாணவி

துப்புரவு பணியில் சேர்ந்த எம்.எஸ்.சி படித்த மாணவி

கோவையில் சமீபத்தில் துப்புரவு பணியாளர்களுக்கான ஆணை வழங்கப்பட்டது. இந்த பணிக்கு எம்.எஸ்.சி. படித்த மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி கூறியதாவது:

”எம்.எஸ்சி. படித்து வரும் நான், மாநகராட்சியில் வேலைக்கு ஆள் எடுப்பதை அறிந்து அதற்கான நேர்காணலில் பங்கேற்றேன். படித்திருக்கிறோம் என்பதால் துப்புரவு பணி செய்யமாட்டோம் என்பது இல்லை. எந்த வேலையாக இருந்தாலும் செய்வோம். வேலை கிடைத்தது என்று போனில் தகவல் வந்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஐடி நிறுவனங்களில் பணி நிரந்தரம் இல்லை, டார்கெட் என்ற டார்ச்சர் ஆகியவை இருப்பதால் பெரும்பாலான இளைஞர்கள் எந்த வேலையாக இருந்தாலும் அரசு வேலையாக இருந்தால் நல்லது என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டதை இது காட்டுவதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply