நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சி தோல்வியடைந்ததை ஒட்டி, காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட அட்டர்னி ஜெனரல் வாஹனவதியும், சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரனும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். தற்போது புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் கூறிய முகுல், “அட்டர்னி ஜெனரல் பதவியை எனக்கு கொடுக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மைதான். இருப்பினும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரும்வரை நான் எதுவும் சொல்வதற்கில்லை என்று கூறியுள்ளார். மேலும் தான் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டால், சுப்ரீம் கோர்ட் வழக்குகளை நெறிப்படுத்துவதே தனது முதல் வேலையாக இருக்கும் என்று கூறினார்.
முந்தைய வாஜ்பாய் அரசில் முகுல் ரோத்தகி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே மோடி, இவரை அட்டர்னி ஜெனரல் பதவிக்கு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.