[carousel ids=”32867,32868,32869″]
‘சமீபத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இந்திய தேசத்திற்காக வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் அவர்களின் மனைவி இந்து நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த கவிதை படிப்பவர்கள் அனைவரையும் கண்ணீர் வரவழைக்கும்படி இருந்தது. அவரது பேஸ்புக் பக்கத்திற்கு அதிகபட்சமான லைக்குகள் கிடைத்து வருகிறது. அவர் எழுதிய கண்ணீர் கவிதை இதுதான்
அவர் மனசு முழுக்க நான்தான் இருந்தேன்
அவர் என் குழந்தையின் அப்பாவாக இருந்தார்
அவர் ஒற்றுமையை நம்பினார்
அவர் வேலையை நேசித்தார்
அவர் தன்னை ஹீரோவாக நினைக்காதவர்
அவர் என் ஆன்மாவாக இருந்தவர்
அவர் எல்லாவற்றையும் என்னிடம் சொன்னார்
அவர் எல்லாவற்றையும் எனக்கு உணர்த்தினார்
அவர் வாழ்க்கை முழுவதும் என்னை காதலித்தார்
அவர் இப்போது கடவுளிடம் இருக்கிறார்
ஒருநாள் நான் அவரைச் சந்திக்கப் போவேன்
என்னைப் பார்த்ததும் அவர் கட்டி அணைத்து வரவேற்பார்
மூச்சுவிட முடியாத அளவுக்கு
அவர் என்னை ஆரத்தழுவும்போது
ஒரு நொடிகூட நான் விலக நினைக்க மாட்டேன்!’
– தன்னுடைய ஃபேஸ்புக்கில் இப்படி காதலில் கசிந்துருகி எழுதியிருக்கிறார் தேசத்துக்காக தனது தேகத்தைத் தந்துவிட்டுப்போன மேஜர் முகுந்த்தின் மனைவி இந்து.