உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி மரணம்

உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி மரணம்
ali
உலகப்புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரரான முகமது அலி உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 74.

காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்ற இயற்பெயரை கொண்ட முகமது அலி தொழில்முறை குத்துச்சண்டை உலகில் குடிசூடா மன்னனாக திகழ்ந்தவர். இதுவரை அவர் 61 குத்துச்சண்டை களங்களை கண்டு, தொடர்ச்சியாக மூன்று முறை உலக சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். மேலும் 56 வெற்றிகளை பெற்றுள்ள முகமது அலி, வெறும் 5 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 30 ஆண்டுகளாக ‘பார்கின்சன் டிஸீஸ்’ எனப்படும் நடுக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட அலி, 1981-ம் ஆண்டுக்கு பின்னர் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. சமீபகாலமாக நுரையீரல் அழற்சி மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட முஹம்மது அலி, அமெரிக்காவின் ஹரிசோனா மாநிலத்தில் உள்ள போயினிக்ஸ் நகரில் வசித்து வந்தார். அவரது மறைவு குத்துச்சண்டை வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Today News: Muhammad Ali Dies: ‘The Greatest’ Boxer Dead at 74

Leave a Reply