முகேஷ் அம்பானியின் சொத்தை வைத்து இந்தியாவை எத்தனை நாட்களுக்கு நடத்தலாம்?
முகேஷ் அம்பானியின் சொத்தை வைத்து இந்தியாவை எத்தனை நாட்களுக்கு நடத்தலாம்?
ஒவ்வொரு நாட்டின் பணக்காரர்களிடம் இருக்கும் மொத்த சொத்து மதிப்பை வைத்து அந்நாட்டை எத்தனை நாட்களுக்கு நடத்தலாம் என்ற ஒரு வித்தியாசமான ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின்படி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்து வரும் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்தையும் வைத்து இந்தியாவை வெறும் 20 நாட்களுக்கு மட்டுமே இயக்க முடியும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
49 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் அடிப்படையின் பணக்காரர்களது சொத்து கணக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. 49 நாடுகளில் அங்கோலியா, ஆஸ்திரேலியா, சிலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோல் சைப்ரஸின் பணக்காரரான ஜான் ஃபிரட்ரிக்சென் சொத்தை, அந்த நாட்டின் 2018ஆம் ஆண்டின் செலவு கணக்கின்படி, 441 நாட்களுக்கு செலவு செய்யலாம். உலகின் பணக்கார பட்டியலில் 16வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஜாக் மா என்பவரது சொத்து மதிப்பு 47.8 பில்லியன் டாலர். இவரது சொத்தை வைத்து சீனாவை 4 நாட்களுக்குத்தான் காப்பாற்ற முடியும்.
அமெரிக்காவின் ஜெஃப் பெசோஸ் சொத்து மதிப்பு 99 பில்லியன் டாலர். இவரது சொத்தை வைத்து அமெரிக்காவை 5 நாட்களுக்குத்தான் இயக்க முடியும். இதேபோல் ஜெர்மனைச் சேர்ந்த டயட்டர் ஸ்வாரஸ், பிரிட்டனின் ஹக் க்ரோஸ்வேனரும் தங்களது சொத்தைக் கொண்டு அவர்களது நாட்டுக்கு 5 நாட்கள் மட்டுமே செலவு செய்ய முடியும்.