தம்பியின் நிறுவனத்தை 23,000 கோடி கொடுத்து வாங்கிய அண்ணன் முகேஷ் அம்பானி!

தம்பியின் நிறுவனத்தை 23,000 கோடி கொடுத்து வாங்கிய அண்ணன் முகேஷ் அம்பானி!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முகேஷ் அம்பானி தனது தம்பி அனில் அம்பானியின் நிறுவனத்தை காப்பாற்ற ரூ. 23,000 கோடி வழங்கியிருக்கிறார்.

இந்தியாவின் முக்கிய பணக்காரர்களில் ஒருவராகிய குருபாய் அம்பானியின் மறைவுக்கு பிறகு அவரது மகன்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் சொத்துக்களை பிரித்துக்கொண்டனர் .

இந்நிலையில் தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பலவித சிக்கல்களை சந்தித்து பெரும் கடனில் மூழ்கியது, 45, 000 கோடி ரூபாய் கடன் சுமைக்கு ஆளான அவரது நிறுவனம் பெரும் பொருளாதார சிக்கலில் இருந்த நிலையில் கருத்துவேறுபாடு இருந்தாலும் அவரது அண்ணன் முகேஷ் அம்பானி தற்போது கைகொடுத்துள்ளார். குருபாய் அம்பானியின் முன்னிட்டு அந்த சொத்துகளை ரூ.23,000 கோடி கொடுத்து அவரே வாங்கியுள்ளார்.

இதனால் தற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஏற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply