சென்னை போரூர் அருகே 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டம். மீட்புப்பணிகள் தீவிரம்

7


|சென்னையை அடுத்த போரூர் அருகே உள்ள முகலிவாக்கம் என்ற இடத்தில் 12 மாடி கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமாகி ஏற்பட்ட விபத்து காரணமாக, இடிபாடுகளில் சுமார் 100 பேர் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் கூறுகின்றன.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1sMkn4J” standard=”http://www.youtube.com/v/_Qf7l6SqO2Q?fs=1″ vars=”ytid=_Qf7l6SqO2Q&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5486″ /]

சென்னையை அடுத்த போரூர் அருகே உள்ள முகலிவாக்கத்தில் புதிதாக ஒரு 12 மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக அந்த கட்டிடத்தின் அடித்தளம் திடீரென ஆட்டம் கண்டு இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

7b
இடிந்து விழுந்த கட்டடத்தில் சுமார் 40 பணியாளர்கள் உள்பட சுமார் 1100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

7aமீட்புப்பணியில் ஈடுபாடிருந்தபோது திடீரென கட்டடத்திற்குள் இருந்த ஒரு கேஸ் சிலிண்டர் வெடித்து மீட்புப்பணி செய்யும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 80 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

7c

 

Leave a Reply