ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: மும்பை அணி வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று பெற்ற விறுவிறுப்பான போட்டியில் பெங்களூர் அணியை மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதனையடுத்து முதலில் களமிறன்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 151 ரன்கள் எடுத்தது.
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 153 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் பாண்ட்யா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
இன்றைய போட்டி ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.