கிகி டான்ஸ் வைரல்: நீதிபதி கொடுத்த புதுமையான தண்டனை

கிகி டான்ஸ் வைரல்: நீதிபதி கொடுத்த புதுமையான தண்டனை

உலகம் முழுவதும் கிகி டான்ஸ் என்னும் டிரெண்ட் பரவி வருவதை அடுத்து, பல பிரமுகர்களும் பொதுமக்களும் கிகி டான்ஸ் வீடியோவை பதிவு செய்து வருகின்றனர். போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி கிகி டான்ஸ் பதிவு செய்தவருக்கு நீதிபதி புதுமையான தண்டனை அளித்துள்ளார்.

மும்பை ரயில் நிலையத்தில் செல்ஃபி எடுக்கவே தடை விதிக்கப்பட்ட நிலையில், ரயிலில் கிகி டான்ஸ் சவால் செய்த 3 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் கிகி சவால் டான்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலான நிலையில், அதைப் பார்த்த போலீஸார் அவர்களை தற்போது கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தியது.

அந்த இளைஞர்கள் கிகி டான்ஸ் செய்த மும்பையில் உள்ள வசை ரயில் நிலையத்தை சுத்தம் செய்ய வேண்டும் எனவும், கிகி டான்ஸ் ஆடுவதால் ஏற்படும் விபரீதத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Leave a Reply