குஜராத் சோமநாதர் கோவிலுக்கு 40 கிலோ தங்கம் காணிக்கை வழங்கிய மும்பை வியாபாரி

குஜராத் சோமநாதர் கோவிலுக்கு 40 கிலோ தங்கம் காணிக்கை வழங்கிய மும்பை வியாபாரி

somnathதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குத்தான் தனிநபர்கள் கிலோ கணக்கில் தங்கத்தை காணிக்கையாக கொடுப்பது வழக்கம். ஆனால் தற்போது குஜராத்தில் உள்ள சோமநாதர் கோவிலுக்கு பக்தர் ஒருவர் 40 கிலோ காணிக்கையை அளித்துள்ளார்.

இதுகுறித்து சோமநாதர் கோவிலின் நிர்வாகி பிரவீண்பாய் கே. லஹரி, நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது: மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான திலீப்பாய் லக்கி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து சுவாமியை தரிசனம் செய்தார். அதன் பின்னர் 40.270 கிலோ கிராம் எடையில் தங்கத்தை அவர் காணிக்கையாகக் கொடுத்தார்.

இந்தக் காணிக்கையுடன், கடந்த 3 ஆண்டுகளில் அவரது குடும்பத்தினர் காணிக்கையாகக் கொடுத்த தங்கத்தின் அளவு 100 கிலோவாக அதிகரித்துள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.30 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தங்கம் யாவும், கோவிலின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார். இதே நபர் இதற்கு முன்னர், கடந்த 2012-ஆம் ஆண்டு 30 கிலோ தங்கத் தட்டை இந்தக் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார்.

Leave a Reply