ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றை ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் அணியை 23ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 8 புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டகாரர்களான சிம்மன்ஸ் மற்றும் பார்த்தீவ் பட்டேல் ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். சிம்மன்ஸ் 71 ரன்களும், பட்டேல் 59 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 172 ரன்கள் எடுத்தது.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் அணி. வழக்கம்போல சேவாக் 2 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆனார். முரளி விஜய், மில்லர் ஆகியோர் ஓரளவுக்கு அடித்து ஆடினாலும், அபாரமான பந்துவீச்சு மற்றும் ரன் அவுட்களாம் பஞ்சாப் அணி வெற்றிக்கு தேவையான ரன்களை குவிக்க திணறியது. இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
சிம்மன்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.,
நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்கோர் விபரம்:
ராஜஸ்தான் அணி 189/2 20 ஓவர்கள்
ரஹானே 91
வாட்சன் 21
கே.கே.நாயர் 61
ஃபால்க்னர் 8
உதிரிகள் 8
டெல்லி அணி 175/7 20 ஓவர்கள்
அகர்வால் 11
எஸ்.எஸ்.அய்யர் 9
டுமினி 56
யுவராஜ்சிங் 22
மாத்யூஸ் 16
ஜாதவ் 11
திவாரி 28
ஆட்டநாயகன்: ரஹானே