உலகின் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்கள்: 2வது இடம் பிடித்த மும்பை
உலகின் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்கள் குறித்த ஒருசர்வே சமீபத்தில் உலக பொருளாதார அமைப்பு (டபிள்யூஇஎப்) எடுத்தது. இந்த சர்வேயின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படு உலகில் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் மும்பை 2வது இடத்தை பிடித்துள்ளது.
உலகில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள முதல் 9 நகரங்கள் குறித்த பட்டியல்:
1. டாக்கா (வங்கதேசம்) – ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 44,500 பேர்
2. மும்பை (இந்தியா) – ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 31,700 பேர்
3. மெடலின் (கொலம்பியா) – ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 19,700 பேர்
4. மணிலா (பிலிப்பைன்ஸ்) – ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 14,800 பேர்
5. மொரக்கோ (கசபிளங்கா) – ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 14,200 பேர்
6. லாகோஸ் (நைஜீரியா) – ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 13,300 பேர்
7. கோட்டா (ராஜஸ்தான், இந்தியா) ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 12,100 பேர்
8. சிங்கப்பூர் – ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 10,200 பேர்
9. ஜகார்த்தா (இந்தோனேஷியா) – ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 9,600 பேர்