பிரேத பரிசோதனையின்போது திடீரென எழுந்து உட்கார்ந்த பிணம். மும்பையில் அதிர்ச்சி சம்பவம்

பிரேத பரிசோதனையின்போது திடீரென எழுந்து உட்கார்ந்த பிணம். மும்பையில் அதிர்ச்சி சம்பவம்
mumbai
மும்பை நகரில் பிளாட்பாரத்தில் வாழ்ந்து வந்த ஒருவர் பேச்சுமூச்சின்றி சாலையின் ஓரத்தில் இருந்ததால், அவரை மும்பை போலீசார் மும்பை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 50 வயதான பிரகாஷ் என்ற அந்த நபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பொதுவாக மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட எந்த ஒரு நோயாளியையும், மருத்துவமனை வார்டிலேயே 2 மணிநேரம் வைத்திருக்கவேண்டும் என்பது விதி. அப்போதுதான் மருத்துவர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டார்களா? என்று கண்டறிய முடியும். ஆனால் விதிமுறைகளை மீறி அந்த நபரை உடனடியாக பிரேதக் கிடங்கிற்கு அலுவலர்கள் கொண்டு சென்றனர்.

பின்னர் சிலமணி நேரம் கழித்து அவரை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல அலுவலர்கள் பிணவறைக்கு சென்றபோது, பிரகாஷ் எழுந்து உட்கார்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது அவர் மரணம் அடையவில்லை என்று தெரியவந்தது. உடனடியாக அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விஷயத்தில் மருத்துவமனை மரபுகள் மீறப்பட்டிருக்கின்றனவா? என்பது குறித்து மருத்துவமனை விசாரணை ஒன்றைத் துவக்கியிருப்பதாக மருத்துவமனையின் டீன், டாக்டர் சுலைமான் மெர்ச்சண்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply