மும்பையின் மின்சார சப்ளைக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமான ரிலையன்ஸ் எனர்ஜி என்ற நிறுவனத்திடம் இருந்துதான் அதிகளவு மின்சாரம் பெறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியை போல மும்பையிலும் மின்சார கட்டணத்தை 50% குறைக்க வேண்டும் என வடக்கு மும்பை பகுதியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு காங்கிரஸ் அமைச்சர் முகம்மது ஆரிப் நசீம்கான், மற்றும் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சஞ்சய், மும்பையில் 50% மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கை நிறைவேறாவிட்டால் அனில் அம்பானி வீட்டிற்கு முன் தீக்குளிப்பேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மும்பையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மும்பைக்கு மின்சாரம் வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனம் உள்பட அனைத்து தனியார் நிறுவனங்களிலும் தணிக்கை நடைபெற மகாராஷ்டிர அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எம்.பி.சஞ்சய் தீக்குளிப்பு காரணமாக அவர் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திலும், அனில் அம்பானி விட்டிற்கு முன்னும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.