வாகன ஓட்டிகளின் வாயை அடைத்த சிக்னல்: மும்பை போலீஸ் அசத்தல்

வாகன ஓட்டிகளின் வாயை அடைத்த சிக்னல்: மும்பை போலீஸ் அசத்தல்

உலகத்திலேயே மிகவும் கொடுமையானது சிக்னலில் காத்திருப்பது என்பது போல் வாகன ஓட்டிகள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். சிக்னலில் ரெட் சிக்னல் விழுந்து 15 வினாடிகள் இருக்கும்போதே வாகன ஓட்டிகள் ஹாரன் அடிக்க தொடங்கி விடுவார்கள் இதனால் சுற்றுச்சூழல் சூழல் மிகுந்த பாதிப்படைவதை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை
இந்த நிலையில் மும்பை போலீசார் இதற்கு முடிவு கட்டி உள்ளனர். சிக்னலில் பச்சை விளக்கு எரியும் முன்னர் ஹாரன் அடித்தால் தானாகவே அந்த சிக்னலில் உள்ள நேரம் அதிகரித்து விடும். அதாவது பச்சை சிக்னல் விழுவதற்கு 15 நொடிகள் இருக்கும் போது வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்து ஒலியை எழுப்பினால், அந்த ஒலி, சிக்னல் அருகே பொருத்தப்பட்டுள்ள சென்சாரில்பட்டு, அது தானாகவே மீண்டும் 90 விநாடிகள் ஆக மாறிவிடும். மேலும் தொடர்ந்து ஹாரன் அடித்தால் இன்னும் அதிகமாகிவிடும்.

இந்த முறை மும்பையில் ஒரு சில இடங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறையால் தற்போது வாகனங்களில் உள்ளவர்கள் யாரும் பச்சை விளக்கு தோன்றும் வரை ஹாரன் அடித்து தொந்தரவு செய்வதில்லை. யாராவது ஹாரன் அடிக்க முயன்றாலும் மற்றவர்கள் அதை தடுக்கின்றனர். இந்த ஐடியா மற்ற பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்

 

https://twitter.com/MumbaiPolice/status/1223090017397960705

Leave a Reply