பால்தாக்கரே முன்பு தலைகுனிந்த மோடி? மும்பை போஸ்டர்களால் பரபரப்பு

பால்தாக்கரே முன்பு தலைகுனிந்த மோடி? மும்பை போஸ்டர்களால் பரபரப்பு
pal takkare
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கூட்டணி கட்சியாகவும், நெருங்கிய நட்புக்கட்சியாகவும் பாரதிய ஜனதா கட்சிக்கு இருந்த சிவசேனா, தற்போது எதிரிக்கட்சி போல் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த ஒருசில கசப்புணர்கள் இரு கட்சிகளையும் பிரித்து வைத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் உறுப்பினரான சுதீந்திர குல்கர்னி மீது வர்ணங்களை பூசி தாக்குதல் நடத்திய சம்பவம் இரு கட்சிகளின் இடையே விரிசலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மும்பையின் தாதர் பகுதியில் உள்ள சேனா பவனில் சிவசேனா கட்சியின் அமைப்பை சேர்ந்த சிலர் மறைந்த பால் தாக்கரே முன்பு பிரதமர் நரேந்திர மோடி தலை குனிந்து இருப்பது போன்ற போஸ்டர்களை ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டர்களில்  மறைந்த பாலாசாஹேப்பின் பாதங்கள் முன் உங்களது பெருமை மிக்க கழுத்து குனிந்திருந்த நாட்களை நீங்கள் மறந்து விட்டீர்களா? என்ற வாசகங்களும் எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் பாஜகவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எனினும் மும்பை மாநகராட்சியினர், இந்த போஸ்டர் அங்கிருந்து எடுக்கப்பட்டு விட்டது என தெரிவித்துள்ளது.

பால்தாக்கரே முன்பு பிரதமர் தலைகுனிந்து இருக்கும் போஸ்டர்கள் ஒட்டி நாட்டின் உயர்ந்த பதவியில் உள்ள ஒருவரை சிவசேனா அவமானப்படுத்திவிட்டதாக பாஜகவினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

Leave a Reply