சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் டிசிஎஸ் பெண் ஊழியர் உமாமகேஸ்வரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் ஐ.டி. ஊழியர்களிடையே நீங்காத நிலையில் அதே டிசிஎஸ் மும்பை நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.
மும்பையில் எஸ்தர் என்ற இளம்பெண் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் இரவு நேரப்பணியை முடித்துவிட்டு, அதிகாலை நான்கு மணிக்கு மும்பை நாசிக் ரயில் நிலையத்தில் தனியாக உட்கார்ந்திருந்தபோது, அவரை அணுகிய ஒரு மர்ம மனிதன், அவருடைய வீட்டில் கொண்டுபோய் தான் விடுவதாகவும், அதற்கு ரூ.300 கொடுக்க வேண்டும் என்றும் பேரம் பேசினான். இதை நம்பிய எஸ்தர் அவனுடன் சென்றார். ஆனால் அவன் இருசக்கர வண்டியில் கொண்டுபோய் விடுவதாக கூறியதால், எஸ்தர் இருசக்கர வாகனத்தில் ஏறமறுத்ததோடு, செல்போனில் போலீஸுக்கு தகவல் கொடுக்க முயற்சித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மர்ம மனிதன் எஸ்தரின் துப்பட்டாவை எடுத்து கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்துவிட்டு, பிணத்தை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள் முட்புதரில் போட்டுவிட்டு தப்பியோடிவிட்டான்.
எஸ்தரின் அழுகிய உடலை 11 நாட்களுக்கு பின்னர் போலீஸார் கண்டுபிடித்து அவருடைய மரணத்திற்கு காரணமான சந்திரா பான் சனா என்ற 23 வயது வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்
அடுத்தடுத்து இரண்டு டிசிஎஸ் பெண் ஊழியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதால் மற்ற பெண் ஊழியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.